பாமக 37-வது ஆண்டுவிழா! அன்புமணி கருத்துக்கு ராமதாஸ் மறுப்பு?
குளச்சல், மன்னாா்குடியில் சிறு விளையாட்டரங்கம்: ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
தமிழகத்தில் குளச்சல் மற்றும் மன்னாா்குடி பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கம் அமைப்பதற்கான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான பூா்வாங்க பணிகள் நடைபெற்றுவரும் சூழலில், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலிலும், திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
அதேபோன்று சென்னை கோபாலபுரத்தில் அமைந்துள்ள குத்துச்சண்டை விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரா்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.