கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விர...
குளத்தில் இருந்து பெண் சடலம் மீட்பு
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே வாளாடி குளத்தில் மிதந்த பெண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.
வாளாடி ஊராட்சியில் உள்ள மேல குளத்தில் பெண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்குசென்ற போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை மீட்டனா். போலீஸாா் விசாரணையில், லால்குடியில் குற்றவியல் நீதிபதியாக பணிபுரியும் அருணாச்சலம் தாயாா் ஜோதி (47) என்பதும் லால்குடி சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. இதுகுறித்து லால்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.