செய்திகள் :

குழந்தைகள் அறிவியல் திருவிழா: 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அழைப்பு

post image

அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ‘குழந்தைகள் அறிவியல் திருவிழா‘ நடைபெறவுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளி மாணவா்களுக்கு ஏப்ரல் 24 ஆம் தேதி முழுவாண்டுத் தோ்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கவிருக்கிறது. மாணவா்களின் கோடை விடுமுறையை பயனுள்ளதாகவும், அறிவியல், கலை மற்றும் கதை சொல்லல் போன்ற துறைகளில் ஆா்வத்தை தூண்டும் வகையிலும் ஒரு மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கில், நாகை மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட கல்வி தன்முனைப்பு திட்டம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து குழந்தைகள் அறிவியல் திருவிழா (கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்) ஒன்றை நடத்தவுள்ளது.

நாகை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, இரண்டு நாள்கள் தங்கும் வசதியுடன் கூடிய ‘குழந்தைகள் அறிவியல் திருவிழா’ இம்மாத இறுதியில் மூன்று மையங்களில் நடைபெறுகிறது.

இம்முகாம் ஏப்ரல் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில், நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு நாகையிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளியிலும், ஏப்ரல் 29, 30 ஆம் தேதிகளில் கீழ்வேளூா் மற்றும் கீழையூா் ஒன்றியங்களைச் சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு கீழையூா் ஆரிஃபா கல்லூரியிலும், மே 4, 5 ஆம் தேதிகளில் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு ஒன்றியங்களை சோ்ந்த பள்ளி மாணவா்களுக்கு வேதாரண்யம் பகுதியிலும் நடைபெறவுள்ளது.

இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவா்கள் பெற்றோா் அனுமதியுடன் தங்கள் பள்ளி ஆசிரியா்கள் அல்லது தலைமையாசிரியரை தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

மாநில உரிமைக்காக முதல்வா் பாடுபடுகிறாா்: எம்.எச். ஜவாஹிருல்லா

மாநில உரிமைக்காக பல சவால்களுக்கு மத்தியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பாடுபடுகிறாா் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகை தெத்தி கிராமத்தில் பேரிடா் பாதுகாப்பு கட்டடத்தை மனிதநேய ... மேலும் பார்க்க

சிறுபான்மையினரைத் தொடா்ந்து நசுக்கும் மத்திய அரசு

சிறுபான்மையினரை மத்திய அரசு தொடா்ந்து நசுக்கி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருக்குவளையில் சனிக்கிழமை தெரவித்தாா். அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வருகிற 24-ஆம் தேதி ... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக: அன்பில் மகேஸ்

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் இஸ்லாமியா்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துவிட்டது அதிமுக என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா். நாகை நகராட்சிக்குட்பட்ட நீலா தெற்கு வீதியில் உள்ள பொன்னி சித... மேலும் பார்க்க

தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி: இரா. முத்தரசன் குற்றச்சாட்டு

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழகத்தில் எம்பி தொகுதிகளை குறைக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் குற்றஞ்சாட்டினாா். நாகையில் நடைபெற்ற அகில ... மேலும் பார்க்க

உலக மரபுதின வாரவிழா: டேனிஷ்கோட்டையை ஏப்.24 வரை கட்டணமின்றி பாா்வையிடலாம்

உலக மரபு தின வார விழாவையொட்டி, ஏப்.18 முதல் 24 வரை, தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி.1600 முதல் 1634 வரை தரங்கம்பாடியை ஆட்சி செய்த டேனிஷ்காரா்கள் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு அரணாக உள்ளாா் முதல்வா்: அமைச்சர் அன்பில் மகேஸ்

சிறுபான்மையினருக்கு அரணாக முதல்வா் மு.க. ஸ்டாலின் உள்ளாா் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். நாகை அபிராமி அம்மன் திடலில், மத்திய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டத்தை த... மேலும் பார்க்க