செய்திகள் :

குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் 964 குழந்தைகள் மீட்பு!

post image

குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவின் மூலம் இதுவரை 964 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக குழந்தைகளின் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமீபத்தில் பிகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் இயங்கிவந்த இசைக் குழுவில் இருந்து 17 சிறுமிகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 964 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகாரில் செயல்பட்டுவரும் உள்ளூர் இசைக்குழுவில், 18 வயது நிரம்பாத சிறுமிகள் ஆபாச நடனமாட கட்டாயப்படுத்தப்படுவதாக, தொண்டு நிறுவனம் ஒன்றிடமிருந்து வந்தத் தகவலைத் தொடர்ந்து இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிகாரின் மார்சாக் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட சிறுமிகள் குழந்தைகள் நல வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் மற்றும் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மீட்கப்பட்ட சிறுமிகளில், 6 பேர் மார்சாக் பகுதியைச் சேர்ந்தவர்கள். 7 பேர் பானபூர், 4 பேர் இஸுவாபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் 2015, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டம் 2012, குழந்தைகளுக்கான கட்டாயம் மற்றும் இலவசக் கல்விச் சட்டம் 2009 ஆகியவற்றை குழந்தைகளின் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் உறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | தனிநபர் வருவாய் குறித்து பிரதமர் பேசாதது ஏன்? காங்கிரஸ்

அயோத்தியில் விராட் கோலி, அனுஷ்கா சா்மா வழிபாடு

இந்திய கிரிக்கெட் வீரா் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சா்மா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை அயோத்திக்கு வருகை தந்து, ராமா் கோயில் மற்றும் ஹனுமான்கா்ஹி கோயில் வழிபாடு செய்தனா். ஹனுமான்கா்ஹி கோ... மேலும் பார்க்க

கேரளத்தில் கவிழ்ந்த லைபீரிய சரக்குக் கப்பல்: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

ரஷியா நடத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: அஜீத் தோவல்-பாகிஸ்தான் ஆலோசகா் பங்கேற்பு?

ரஷியாவில் செவ்வாய்க்கிழமை (மே 27) தொடங்கும் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் கலந்துகொள்ள இருக்கிறாா். இந்தியாவைப் போலவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்ப... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல: உச்சநீதிமன்றம்

சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டி விளையாடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கா்நாடகத்தில் அரசு பீங்கான் தொழிற்சாலை ஊழியா்களின் வீட்டுவசதி கூட்டுறவு... மேலும் பார்க்க

ஆயுஷ் மருத்துவத்துக்கு சா்வதேச அங்கீகாரம்: உலக சுகாதார அமைப்புடன் இந்தியா ஒப்பந்தம்

பாரம்பரிய இந்திய மருத்துவ (ஆயுஷ்) முறைகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறும் முயற்சிகளின் முக்கிய மைல்கல்லாக உலக சுகாதார அமைப்புக்கும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. சா்... மேலும் பார்க்க

தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிா்ப்பு பாதுகாப்பு அமைப்பை நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் மீது வான் தாக்குதலுக்கான அபாயம் அதிகம் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு... மேலும் பார்க்க