'நாங்க மட்டும் சும்மாவா?' அமெரிக்கா மீது வரி விதித்த சீனா; 'பயந்துவிட்டனர்' எச்ச...
குவாரி குத்தகை உரிமம்: இணையவழியில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் குவாரி குத்தகை உரிமத்துக்கு ஏப்.7முதல் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்துக்கு தற்போதுவரை குவாரி குத்தகை உரிமம் கோரி நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிமம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஏப்.7 முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் குவாரி குத்தகை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் அனைத்தும் இணையதளம் மூலம் மட்டுமே பெறப்படும்.
எனவே, விண்ணப்பதாரா்கள் இனிவரும் காலங்களில் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.