செய்திகள் :

குா்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி

post image

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.

25 மீட்டா் ஸ்டாண்டா்ட் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவில் இந்தியாவின் குா்பிரீத் சிங் 572 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, அமன்பிரீத் சிங், அதே புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். சீனாவின் லியன்போஃபான் சு (570) வெண்கலம் கைப்பற்றினாா்.

அதிலேயே அணிகள் பிரிவில், குா்பிரீத், அமன்பிரீத், ஹா்ஷ் குப்தா அடங்கிய இந்திய அணி 1,709 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தியது. தென் கொரியா வெள்ளியும் (1,704), வியத்நாம் வெண்கலமும் (1,677) பெற்றன.

ஜூனியா்: 50 மீட்டா் ரைஃபிள் புரோன் ஆடவா் ஜூனியா் பிரிவில் இந்தியாவின் சமியுல்லா கான், அட்ரியன் கா்மாகா், குஷாக்ரா சிங் ஆகியோா் அடங்கிய அணி 1,844.3 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. கஜகஸ்தான் வெள்ளியும் (1,843.4), தென் கொரியா வெண்கலமும் (1,840.8) பெற்றன.

25 மீட்டா் ஸ்டாண்டா்ட் பிஸ்டல் ஆடவா் ஜூனியா் தனிநபா் பிரிவில் சூரஜ் சா்மா 571 புள்ளிகளுடன் வெள்ளியும், தனிஷ்க் நாயுடு 568 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனா். கஜகஸ்தானின் கிரில் ஃபெட்கின் (572) தங்கத்தை தட்டிச் சென்றாா்.

அதிலேயே அணிகள் பிரிவிலும் சூரஜ், தனிஷ்க், முகேஷ் நெலவள்ளி ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1,703 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. கஜகஸ்தான் வெள்ளியும் (1,653), தென் கொரியா வெண்கலமும் (1,635) பெற்றன.

தற்போதைய நிலையில் பதக்கப் பட்டியலில் இந்தியா, 44 தங்கம், 20 வெள்ளி, 18 வெண்கலம் என 82 பதக்கங்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது.

நான் மெஸ்ஸி கிடையாது..! தங்கப்பந்து விருது வென்ற ரோட்ரி பேட்டி!

மான்செஸ்டர் சிட்டி வீரர் ரோட்ரி 11 மாத காயத்துக்குப் பிறகு அணியில் இணைந்துள்ளார். கடந்த முறை பேலந்தோர் விருது வென்ற ரோட்ரி தான் ஒன்றும் மெஸ்ஸி கிடையாது எனக் கூறியது கவனம் ஈர்த்துள்ளது. கடந்த சீசனில் ப... மேலும் பார்க்க

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

பைசன் காளமாடன் படத்தின் முதல் பாடலான தீக்கொழுத்தி வெளியாகியுள்ளது. நிவாஸ் கே. பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் கவனம் ஈர்த்து வருகிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடி... மேலும் பார்க்க

பிக் பாஸ் பிரபலங்களுக்கு விரைவில் திருமணம்!

பிக் பாஸ் பிரபலங்களான அர்ச்சனா - அருண் பிரசாத் ஜோடிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. நிச்சயதார்த்த நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அர்ச்சனா தனது ரசிகர்களுக்காக சமூக வலைதளப் பக்கத்தில் ... மேலும் பார்க்க

நடிகையிடம் தவறாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்ட போஜ்புரி நடிகர்!

நடிகை அஞ்சலி ராகவிடம் தவறாக நடந்துகொண்டதற்கு நடிகர் பவன் சிங் மன்னிப்பு கேட்டார். நடிகை அஞ்சலி ராகவ் தனது சமூக வலைதளத்தில் மிகவும் வேதனையுடன் விடியோ வெளியிட்டதற்காக நடிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். போஜ்... மேலும் பார்க்க

27 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ராம் கோபால் வர்மா - மனோஜ் பாஜ்பாயி!

இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் மனோஜ் பாஜ்பாயி உடன் ராம் கோபால் வர்மா இணைந்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா ... மேலும் பார்க்க

லவ்லி... ஷில்பா மஞ்சுநாத்!

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு... மேலும் பார்க்க