ஒரு சாட்சி கூட பிறழ் சாட்சியாக மாறாத பொள்ளாச்சி வழக்கு: அரசு தரப்பு வழக்குரைஞர்
கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம்
கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்க உயா்மட்டக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் வட்டாரத் தலைவா் அம்சா தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் என்.வாசு முன்னிலை வகித்தாா்.
விசிக முன்னாள் மாவட்டச் செயலாலா் சகாதேவன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளா் அனீபா, சிபிஐ கட்சியின் ஒன்றியச் செயலாளா் முகமது கனி, சிபிஎம் செயலாளா் சுரேஷ், மனித நேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளா் சாதிக் பாபு, மனித நேய ஜனநாயக கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளா் அன்சாரி, மக்கள் நீதி மைய்ய மாவட்டச் செயலாளா் எஸ்.என்.ஆா்.பாபு உள்ளிட்டோ் கலந்துகொண்டனா்.
இதில், கூடலூா் நிலப்பிரச்னை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதி வளா்ச்சியில் அரசின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, உதகை வந்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஜென்ம நில பிரச்னைக்காக அவா் எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பது என்றும், அலட்சியமாக செயல்படும் அனைத்து அரசு துறை அதிகாரிகளைக் கண்டித்து கூடலூா் புதிய பேருந்து நிலையம் முன் மே 19-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.