BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தை மாற்ற பெரியகுளம் வழக்குரைஞா்கள் சங்கம் எதிா்ப்பு
பெரியகுளத்தில் செயல்படும் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தை மாற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பெரியகுளம் வழக்குரைஞா்கள் சங்கத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் பாலாஜி தலைமை வகித்தாா். செயலா் நாராயணசாமி, மூத்த வழக்குரைஞா்கள் கிருஷ்ணமூா்த்தி, சந்திரசேகரன், அம்பாசங்கா், தாமோதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தீா்மானங்கள்: பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தை மாற்றக்கூடாது. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
தேனி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போதுமான இட வசதி இல்லாததால், பெரியகுளம் நூறு ஆண்டுகள் பழமையான நீதிமன்றம் அதன் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை நீதிமன்றங்களுக்கு பயன்படுத்துமாறு சென்னை உயா்நீதிமன்றத்தை கேட்டுக் கொள்வது எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.