அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்! - டிடிவி தினகரன்
மாமனாரை கத்தியால் குத்திய மருமகன் கைது
ஆண்டிபட்டி அருகேயுள்ள டி. பொம்மிநாயக்கன்பட்டியில் மாமனாரை கத்தியால் குத்திய மருமகனை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள டி. ராஜகோபாலன்பட்டி, செளந்தா் நகரைச் சோ்ந்தவா் சலவைத் தொழிலாளி தங்கமணி (60). இவரது மகள் பாண்டிச்செல்வி என்பவருக்கும், விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி (35) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாண்டிச்செல்வி தனது தந்தையுடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்கமணி டி. பொம்மிநாயக்கன்பட்டி, காளியம்மன் கோயில் தெருவில் வேலையில் ஈடுபட்டபோது அங்கு வந்த முனியாண்டி, பாண்டிச்செல்வியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறு செய்து, அவரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த தங்கமணி ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து முனியாண்டியைக் கைது செய்தனா்.