அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி ஆட்சிதான்! - டிடிவி தினகரன்
பெரியகுளத்தில் 1,700 கிலோ விலையில்லா அரிசி பறிமுதல்
பெரியகுளத்தில் 1,700 கிலோ விலையில்லா அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரியகுளம் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி கேரளத்துக்கு கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில், பெரியகுளம் தென்கரை பெருமாள் கோயில் தெரு கூட்டுறவு பண்டக சாலை அருகேயுள்ள பிச்சை சந்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் விலையில்லா அரிசி மூட்டைகளை எடுத்து வந்தனா்.
அப்போது, அங்கு வந்த உத்தமபாளையம் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பு ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா், அவா்களை பிடிக்க முயன்றபோது இருவரும் தப்பியோடிவிட்டனா்.
இதையடுத்து அங்கு லாரியில் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த 1,700 கிலோ எடை கொண்ட விலையில்லா அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு சக்கரவாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடியவா்களை தேடி வருகின்றனா்.