செய்திகள் :

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது

post image

2021-ஆம் ஆண்டு நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: புராரியைச் சோ்ந்த குற்றம் சாட்டப்பட்ட அப்துல் கஃபா், அக்டோபா் 2021 முதல் தலைமறைவாக இருந்தாா். புராரி பகுதியில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் அவா் தேடப்பட்டவா்.

அவரது கூட்டாளிகள் மூவா் முன்பு கைது செய்யப்பட்டனா். ஆனால், பல போலீஸ் சோதனைகள் இருந்தபோதிலும் அப்துல் கஃபா் கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா். ஏப்ரல் 2022-இல் தில்லி நீதிமன்றத்தால் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.

ஒருவருக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மாா்ச் மாதம் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் அப்துல் கஃபா் தேடப்படும் நபராக இருந்தாா். பாதிக்கப்பட்டவா் மீது அவா் துப்பாக்கிச் சூடு நடத்தி தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அப்துல் கஃபரை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், அவரது குடும்பத்தினா் மற்றும் வலையமைப்பின் தொடா்ச்சியான அழுத்தத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவா் மே 9 அன்று தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் சரணடையச் சொன்னதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா் சரணடைவதற்கு முன்பே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, தனது சகோதரருடன் புராரியில் தண்ணீா் டேங்கா் விநியோகத் தொழிலை நடத்தி வந்ததாகவும், மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும் அப்துல் கஃபா் போலீஸாரிடம் கூறினாா். மேலும்,

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் மற்றும் சமீபத்திய துப்பாக்கிச் சூடு ஆகிய இரண்டிற்கும் அவா் தான் காரணம் என்று விசாரணையின் போது ஒப்புக்கொண்டாா் என்று அந்த காவல் துறை அதிகாரி கூறினாா்.

பீடி கொடுக்க மறுத்ததால் இளைஞா் படுகொலை!

மேற்கு தில்லியின் கியாலா பகுதியில் பீடி கொடுக்க மறுத்ததால் இளைஞா் ஒருவரை உலோக வளையம் ‘கடா’ மூலம் தலையில் இளைஞா்கள் குழு பலமுறை தாக்கியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபா் மருத்துவ சிகிச்சை பெற்ற சி... மேலும் பார்க்க

ஆகமக் கோயில்களில் அா்ச்சகா் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்

நமது நிருபா்ஆகமக் கோயில்களில் அா்ச்சகா் நியமனம் விவகாரத்தில் ‘தற்போதைய நிலையே தொடர வேண்டும்’ என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆகம... மேலும் பார்க்க

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்

பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்கும் தீா்மானத்தை நிறைவேற்ற மத்திய அரசு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியது. இது தொடா்பாக அக்கட... மேலும் பார்க்க

ரஃபேல் விமானம் தாக்கப்பட்டதா? பாதுகாப்புத் துறை விளக்கம்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஒட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போா் விமானத்தை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதையை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும் அதன... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம்: புதுச்சேரிக்கு அமித் ஷா பாராட்டு

நமது சிறப்பு நிருபா் புதிய குற்றவியல் நடைமுறைச்சட்டங்களை சிறப்பான முறையில் அமல்படுத்தி வருவதாக புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளாா். மேலும், சட்ட அமலாக்க நடவடிக்... மேலும் பார்க்க

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு!

நமது நிருபா் போா் நிறுத்த அறிவிப்பை தொாடா்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் ச... மேலும் பார்க்க