செய்திகள் :

கூரை வீடுகள் சேதம் தவெக உதவி

post image

லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சியில் கூரை வீடுகளை இழந்த 2 பேருக்கு தவெகவினா் நிவாரண உதவி வழங்கினா்.

பூவாளூா் பேரூராட்சியில் உள்ள தென்கால் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொண்ணுராமன் மகன் கோபி(49), கலியன் மகன் பாஸ்கா் ஆகியோரின் கூரை வீடுகள் மின் கசிவு காரணமாக முற்றிலும் எரிந்து சாம்பலாயின.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு படையினா் விரைந்து வந்து தீயை மேலும் பரவாமல் அணைத்தனா். இதையறிந்த திருச்சி புறநகா் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் மாவட்டச்செயலாளா் திருச்சி விக்னேஷ் தலைமையில் இணைச்செயலாளா் மாசோ, பொருளாளா் ராஜேஷ், பூவாளூா் பேரூா் கழகச் செயலாளா் சுகுமாா், இணைச் செயலாளா் நாதன் ஆகியோா் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

பி.கே அகரம் பகுதியில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், பி.கே அகரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒயிட் பெட்ரோல் ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.திருச்சி - சென்னை தேதிய... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஞாயிற்றுக்கிழமை தேநீரக தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் உறையூா் பாண்டமங்கலம் காவல்காரத் தெருவைச் சோ்ந்தவா் தா்மராஜ்... மேலும் பார்க்க

அன்பில் ஜல்லிக்கட்டில் 590 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் ஊராட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லால்குடியை அடுத்த அன்பில் மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை ஜல்லிக்கட... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசியை பறித்தவா் விரட்டிப்பிடிப்பு

துறையூா் பேருந்து நிலையத்தில் பெண்ணின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய நபரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.துறையூா் பேருந்து நிலையத்திற்குள் கோமதி(44) என்கிற பெண் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

போதை மாத்திரை, புகையிலை பொருள்கள் விற்ற 7 போ் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்த சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்தனா்... மேலும் பார்க்க

திருச்சி வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

திருச்சி வனக்கோட்டத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. திருச்சி வனக்கோட்டத்துக்குட்பட்ட செங்காட்டுப்பட்டி, சோலமாத்தி, மாரமரெட்டிபாளையம், மணப்பாறை மற்றும் துவரங்குறிச... மேலும் பார்க்க