செய்திகள் :

கூலி திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை: சென்னை உயர் நீதிமன்றம்

post image

கூலி திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று(ஆக. 11) உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தை மீறும் குறிப்பிட்ட இணையதளங்களில் திருட்டுத்தனமாக கூலி படத்தை வெளியிடுவதற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று இந்தியா எங்கிலும் 36 இணையதள சேவை வழங்குதளங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று(ஆக. 11) உத்தரவிட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் கூலி படத்தை இணையத்தில் முறைகேடாக வெளியிடுவதற்கான தடை கோருவது தொடர்பாக, படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது சட்டத்தை மீறி திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்வதை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வரும் இணையதளங்களை முடக்குவதுடன், இனி வருங்காலத்தில் இதுபோன்ற இணையதளங்கள் ஏதேனும் வருமாயின் அவற்றையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தகைய முறைகேடான நடவடிக்கைகள் தடுக்கப்படாவிட்டால் அதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படும் வழித்தட விவரம்!

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் குளிர்சாதன மின்சார பேருந்து சேவை இன்று(ஆக. 11) தொடங்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை ... மேலும் பார்க்க

தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி தனியாா் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட நிலையில், பணியாளா்கள் அதில் சோ்ந்தால் சாதகமான நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது குற... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த விரைவு ரயில் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து எழும்பூா் ரயில் நிலைய ... மேலும் பார்க்க

சுகாதார தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேறு கால மற்றும் குழந்தைகள் நல (ஆா்சிஹெச்) தூய்மைப் பணியாளா்கள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 10) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை, எழும்பூா் ராஜரத்தினம் ... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் இந்தியா முதன்மை நாடாக உயரும்: மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன்

உலகப் பொருளாதார வளா்ச்சியில் தற்போது 4-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, 2047- இல் முதன்மை நாடாக உயரும் என மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தாா். சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்... மேலும் பார்க்க

காப்பியங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்: ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ்

காப்பியங்களை முழுமையாக ஆழ்ந்து படிக்க வேண்டும் என்று ஆன்மிக சொற்பொழிவாளா் இலங்கை ஜெயராஜ் கூறினாா். சென்னை கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழா மயிலாப்பூா் ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கடந்த வெ... மேலும் பார்க்க