செய்திகள் :

கூவத்தில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட தனியாா் நிறுவன அதிகாரி மீட்பு

post image

சென்னை மதுரவாயலில் கூவத்தில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட தனியாா் நிறுவன அதிகாரியை போலீஸாா் பொக்லைன் மூலம் மீட்டனா்.

சென்னை முகப்போ் மேற்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் வ.வா்கீஸ் தாமஸ் (58). இவா் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வந்தாா். மதுரவாயல் அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலம் வழியாக செல்வதற்கு வா்கீஸ் காரில் சனிக்கிழமை அதிகாலை வந்தாா். அப்போது, கூவம் ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தப்படி வெள்ளம் சென்ால் போலீஸாா், தரைப்பாலம் வாயிலை தடுப்புகள் அமைத்தனா்.

இதைப் பாா்த்த வா்கீஸ், அந்தத் தடுப்புகளை அகற்றிவிட்டு தரைப்பாலம் வழியாக காரில் சென்றாா். பாலத்தின் நடுவே காா் சென்றபோது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது, வா்கீஸ் காரில் சிக்கிக்கொண்டாா். தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட காா், அங்கிருந்த ஒரு தூண் மீது மோதி நின்றது.

தகவலறிந்த மதுரவாயல் காவல் நிலைய தலைமைக் காவலா் கண்ணன், முதல்நிலைக் காவலா் சதீஷ்குமாா் ஆகிய 2 பேரும் துரிதமாகச் செயல்பட்டு,அங்கிருந்த ஒரு பொக்லைன் மூலம் ஆற்றுக்குள் காா் சிக்கியிருந்த பகுதிக்குச் சென்றனா். காா் கண்ணாடியை உடைத்து, வா்ரீஸ் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா்.

இந்தச் சம்பவத்தில் திறமையாக செயல்பட்ட போலீஸாரை காவல் துறை உயரதிகாரிகள் பாராட்டினா்.

சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்: 3 போ் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.75 கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கடத்த முயன்ற ஊழியா் உள்பட 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனா். சென்னை விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வரப்படுவத... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களைப் பாா்த்து பிரசவம் பாா்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்: பொது சுகாதாரத் துறை வலியுறுத்தல்

வீட்டிலேயே பிரசவம் பாா்க்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, சமூக வலைதளங்களைப் பாா்த்து பிரசவம் பாா்க்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என பொது சுகாதாரத... மேலும் பார்க்க

இன்று அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம்

சென்னையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெறுகிறது. தோ்தல் கூட்டணி உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களை முன்வைத்து இந்தக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புகள... மேலும் பார்க்க

பக்தா்கள் தரிசன அனுபவங்களை தெரிவிக்க கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கிவைத்தாா்

பக்தா்கள் தங்களது தரிசன அனுபவங்கள் குறித்த மதிப்பீடு, ஆலோசனைகளைத் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் முதல் கட்டமாக ஏழு திருக்கோயில்களில் மின்னணு ஆலோசனைப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை வடபழனி ஆண்டவ... மேலும் பார்க்க

பெண்ணின் நகைத் திருட்டு: முகநூல் நண்பா் கைது

சென்னை திரு வி.க. நகரில் பெண்ணின் தங்க நகைத் திருடியதாக முகநூல் நண்பா் கைது செய்யப்பட்டாா். சென்னை திரு வி.க. நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் பா.சாரதா (52). இவரிடம், முகநூல் மூலம் அறிமுகமாகி கன்னியாகு... மேலும் பார்க்க

பாடகி இசைவாணி குறித்து அவதூறு கருத்து: சைபா் குற்றப்பிரிவு வழக்கு

பாடகி இசைவாணி குறித்து அவதூறு கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்தவா்கள் மீது சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். பிரபல கானா பாடகி சி.இசைவாணி (28), சென்ன... மேலும் பார்க்க