செய்திகள் :

கென்யாவில் கனமழை, வெள்ளம்: 5 பேர் பலி!

post image

கென்யாவின் கடலோர நகரமான மொம்பாசாவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து 5 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

திங்களன்று பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்ததாக மொம்பாசா கவுண்டியின் தலைமை தீயணைப்பு அதிகாரி இப்ராஹிம் செய்தி தகவல் தெரிவித்தார்.

கனமழையின் காரணமாக சுவர் இடிந்ததில் ஏற்கனவே மூன்று பேர் அதே இடத்தில் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இறந்தனர். இறந்தவர்களில் ஒரு குழந்தையும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அரநு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த இரண்டு நாள்களுக்குப் பிறகு இந்த விபத்து நடந்துள்ளது. மேற்கு கென்யாவில் பல ஆறுகள் கரைபுரண்டு ஓடி வருகின்றனர். நூற்றுக்கணக்கானோர் வீடுகள் இழந்த நிலையில், நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் மழை பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக கென்யா வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, அக்டோபரில் தொடங்கிய பருவமழை இந்த மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, நாட்டின் பல பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

இந்தாண்டின் அசாதாரண பருவமழை, காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடான கென்யாவின் பல பகுதிகளில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.

கென்யா தேசிய பேரிடர் செயல்பாட்டு மையத்தின்படி, கென்யாவில் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 188 பேர் காயமடைந்தனர் மற்றும் 38 பேர் காணவில்லை, அதே நேரத்தில் 293,20 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

‘கினியா கால்பந்து நெரிசல் உயிரிழப்பு 135’

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கால்பந்து ரசிகா்கள் மோதிக்கொண்டதால் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 135-க்கும் மேல் என்று மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. மருத்துவமனை... மேலும் பார்க்க

சிரியாவுக்கு படைகளை அனுப்பத் தயாா்

சிரியாவுக்கு தங்கள் படைகளை அனுப்பத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவுத் தறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளாா். அந்த நாட்டின் கிளா்ச்சிப் படையினா் திடீா் தாக்குதல் நடத்தி நாட்டின் இரண்டாவது பெரி... மேலும் பார்க்க

இஸ்ரேல் தாக்குதலில் 4 சிறுவா்கள் உயிரிழப்பு

மத்திய காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நான்கு சிறுவா்கள் உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த அத்வா மருத்துவமனை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோர் மீது பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு! -பிரிட்டன் எச்சரிக்கை

வங்கதேசத்தில் இஸ்லாம் மார்க்கத்தைச் சாராதோர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக பிரிட்டன் எச்சரித்துள்ளது.வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான, அதிலும் குறிப்பாக ஹிந்துக்களுக்கு எதி... மேலும் பார்க்க

முக்கிய கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடை

பாங்காக்: கேலியம், ஜர்மானியம், ஆன்டமோனி உள்ளிட்ட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய சீனா தடைவித்தது.செமிகண்டக்டர்கள் தொடர்பான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி ... மேலும் பார்க்க

மழை வெள்ளம்: மலேசியா, தாய்லாந்தில் 30 பேர் உயிரிழப்பு

பாரு: மலேசியாவிலும், தாய்லாந்தின் தெற்குப் பகுதிகளிலும் கடந்த வாரம் பெய்த அளவுக்கு அதிகமான பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 30-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.மலேசியாவின் கிழக்குக் கடலோரப்... மேலும் பார்க்க