செய்திகள் :

கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

post image

கேதார்நாத் கோயிலின் நடை இன்று கோலாகலமாகத் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

உத்தரக்கண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்களில் ஒன்றாகவும், சார்தாம் யாத்திரையின் முக்கிய தலமாகவும் விளங்குகிறது. இந்தக் கோயில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மந்தாகினி ஆற்றில் கரையில் 3,583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் - மே மாதங்களில் கோயில் நடை திறக்கப்படும். அதன்படி இந்தாண்டுக்கான சார் தாம் யாத்திரை இன்று தொடங்கியது. முன்னதாக பாதுகாப்பு காரணக்களுக்காக ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு கேதார்நாத் கோயிலை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடங்கிவைத்தார்.

முன்னதாக, தலைமை அர்ச்சகரால் மத சடங்குகள் நடத்தப்பட்டன. கோயிலில் பலவித வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் திறப்பு விழாவின்போது ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டன.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையில் கேதார்நாத் கோயில் இன்று நடை திறக்கப்பட்டு காலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்..! வைரல் விடியோ!

கால்பந்து வீரர் ஆண்டனியின் சவாலை ஏற்று எளிதாக செய்து முடித்த நெய்மரின் விடியோ வைரலாகி வருகிறது.பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர்களான ஆண்டனி (25) , நெய்மர் (33) கால்பந்து உலகில் மிகவும் பிரபலமானவர்களா... மேலும் பார்க்க

சிம்பு - 49 பூஜையுடன் ஆரம்பம்!

நடிகர் சிம்புவின் 49-வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.நடிகர் சிலம்பரசனின் 42-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 49-ஆவது திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தற்காலிகமாக இந்தப் படத்துக்கு ’எ... மேலும் பார்க்க

மகளின் குறுஞ்செய்தியால் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தேன்: சூர்யா

நடிகர் சூர்யா தன் மகள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்கள... மேலும் பார்க்க

துல்கர் சல்மானின் ‘ஐயம் கேம்’ படப்பிடிப்பு துவக்கம்!

துல்கர் சல்மான் நடிக்கும் ஐயம் கேம் படத்தின் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக துல்கர் ... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் விஜய் பட வசனங்களை வைத்தது ஏன்? இயக்குநர் பதில்!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே.1ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் விஜய் பட வசனங்கள் ரசிகர்களிடையே ஆதரவினைப் பெற்றுள்ளன. இந்தப் படத்தி... மேலும் பார்க்க

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஓடிடி வெளியீடு!

நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகரும் கார் ரேசருமான அஜித் குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அ... மேலும் பார்க்க