செய்திகள் :

கேரளத்தில் சிறுமி பலி: மூளையைத் தின்னும் அமீபா உடலுக்குள் எப்படி நுழைகிறது?

post image

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி மரணமடைந்துள்ளார். மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர்.

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) என்று சொல்லக்கூடிய முதன்மை அமீபிக் மூளைக்காய்ச்சல்(primary amoebic meningoencephalitis) என்ற அரிய வகை தொற்று கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

அவ்வப்போது இதன் பாதிப்பு இருந்துவரும் நிலையில், கேரளத்தில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆக. 4 ஆம் தேதி 3 மாத குழந்தைக்கு இந்த அமீபா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அந்த குழந்தை தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. மேலும் 40 வயது நபர் ஒருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

தொடர்ந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமரசேரி பகுதியைச் சேர்ந்த 4 ஆம் வகுப்பு மாணவி அனன்யா(9) இந்த அரிய வகை தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் இந்த அமீபா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த குடும்பத்தினர் வேறு கிணற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த கிணற்றில் குளித்தவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எப்படி பரவுகிறது?

சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம்.

சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம்.

நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.

சிகிச்சை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது.

இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் இருப்பதில்லை. அசுத்தமான நீரை குடிக்கும்போது பரவாது. குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுகிறது.

பாதிப்பு விவரம்

1971ல் முதல்முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்ட நிலையில் கடந்த 2016ல் கேரளத்தில் முதல் பாதிப்பு அறியப்பட்டது. 2016 முதல் 2023 வரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கேரளத்தில் இதனால் 36 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்தாண்டு இத்துடன் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

9-year-old girl dies due to brain-eating amoeba in Kerala

மசோதாவை நிறுத்திவைத்தால் ஆளுநரின் விருப்பப்படி அரசு எப்படி இருக்கும்? - உச்சநீதிமன்றம்

ஆளுநர் தனது விருப்பப்படி மசோதாவை நிறுத்திவைத்தால் அரசு எப்படி ஆளுநரின் விருப்பப்படி செயல்படும்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு... மேலும் பார்க்க

முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு! சசி தரூர் ஆதரவு?

அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.அமைச்சர்கள், முதல்வர்கள் பதவிப்பறிப்பு குறித்த மசோதாவை காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, கொடூரமா... மேலும் பார்க்க

அமளிக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா!

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் மசோதா மக்களவையில் இன்று(ஆக. 20) தாக்கல் செய்யப்பட்டது.பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க... மேலும் பார்க்க

கேரள நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள துணை நீதிமன்றத்துக்கு, இன்று (ஆக.20) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தின், வடக்கு பராவூர் பகுதியில் அமைந்துள்ள துணை நீதிமன... மேலும் பார்க்க

குவஹாட்டி உயர்நீதிமன்றத்துக்கு 2 நிரந்தர நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

குவஹாட்டி உயர்நீதிமன்றத்தில் இரண்டு கூடுதல் நீதிபதிகளை நிரந்திர நீதிபதிகளாக நியமிக்கும் திட்டத்திற்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியத் தலைமை நீதிபதி பி,ஆர். கவாய் தலைமையிலான கொல... மேலும் பார்க்க

3,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த ஆரக்கிள் நிறுவனம்!

அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் இந்தியாவில் சுமார் 3,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகி... மேலும் பார்க்க