இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அக...
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இன்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி நடப்பாண்டு 6 நாள்களுக்கு முன்னதாகவே கேரளத்தில் பருவமழை தொடங்கியுள்ளது.
கடந்த 2000 - 2025 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி பருவமழை தொடங்கியதே மிகவும் முன்கூட்டிய பருவமழை தொடக்கமாக இருந்தது. இதன்பின்னர் தற்போது 2025ல் மே 24ல் கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
முன்னதாக 1990 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதியே கேரளத்தில் பருவ மழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Southwest Monsoon has set in over Kerala, today the 24 th May 2025:
— India Meteorological Department (@Indiametdept) May 24, 2025
Southwest Monsoon has set in over Kerala today, the 24th May, 2025, against the normal date of 1st June. Thus, southwest monsoon has set in over Kerala 8 days before the normal date. This is the earliest date… pic.twitter.com/n9TcdkG3Ym
இதனிடையே அரபிக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரிக்கு வட மேற்கே 40 கிலோ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது இன்று முற்பகலில் கரையைக் கடக்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இன்றும் நாளையும் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.