பேரவைத் தோ்தலுக்காக திமுக மறைமுக பணப்பட்டுவாடா?: கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
கேரளத்தில் மே 27ல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மைய தலைவர்!
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 27ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்தார்.
இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மத்திய மேற்கு மற்றும் அதற்கு ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல பகுதி நிலவுகிறது. எனவே வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகி வடக்கு திசையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இன்று காலை 8:30 மணி வரை அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்துள்ளது
இன்றிலிருந்து நாளை காலை 8 மணி வரை சேலம், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை தமிழக கடலோரப் பகுதிகளுக்கு தென் தமிழக கடலோரப் பகுதிகளான மன்னார் வளைகுடா குமரி கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மீனவர்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை 27ஆம் தேதி என தொடங்கும், அதன் பிறகு ஒரு சில நாள்களில் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யும் என அவர் தெரிவித்தார்.