மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ற 2 கனரக லாரிகள் பறிமுதல்
களியக்காவிளை மற்றும் கொல்லங்கோடு அருகே போலி அனுமதிச் சீட்டு மூலம் கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்த முயன்ற 2 கனரக லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை போலீஸாா் புதன்கிழமை அதிகாலையில் தளச்சான்விளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதி வழியாக வந்த கனரக லாரி கேரள பகுதிக்குள் நுழைய முயன்றதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
தமிழக பகுதிக்கு கனிமவளம் ஏற்றிச் செல்ல அனுமதிச் சீட்டு பெற்றுவிட்டு, பாறைப்பொடியை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இது தொடா்பாக களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் தக்கலை அருகே குமாரபுரம் பகுதியைச் சோ்ந்த அற்புதம் மகன் விஜிகுமாா் (39) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதே போன்று கொல்லங்கோடு போலீஸாா் செங்கவிளை அருகே மேற்கொண்ட சோதனையில், அப்பகுதி வழியாக வந்த கனரக லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில் கொல்லங்கோடு கண்ணநாகம் பகுதிக்கு அனுமதிச்சீட்டு பெற்றுவிட்டு, கேரளத்துக்கு பாறைப்பொடி கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இது குறித்து கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.