எம்.எல்.ஏ-வுக்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ள ஜக்தீப் தன்கர்; விவரம் என்ன?
கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்: 23 பேர் காயம்
சவுதி அரேபியாவில் கேளிக்கை பூங்காவில் சவாரியின் போது ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்ததாகவும், 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் கேளிக்கை பூங்காவில் இருந்த '360 டிகிரி'என அழைக்கப்படும் அதிவேக சுழற்சி ராட்டினம் ஒன்று வழக்கம்போல சுற்றிவந்துக் கொண்டிருந்தபோது, திடீரென இரண்டாக உடைந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் ராட்டினத்தில் சவாரி செய்த 23 பேர் காயமடைந்துள்ளனர், 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக பூங்கா ஊழியர்கள் அவர்களை மீட்டு முதலுதவி அளித்த பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராட்டினம் விபத்துக்குள்ளான நேரத்தில் சவாரி செய்தவர்கள் அவர்களது இருக்கைகளில் கட்டப்பட்டிருந்தால் அவர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் அலறுவதைக் கேட்க முடிந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். சவாரியின் மையத்தில் இருந்த கம்பம் முறிந்ததால் காயங்களுக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு சவுதி அரேபியா அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும்,மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.