"செங்கோட்டையன் பக்கம் அதிமுக-வினர் கூடுவார்கள்; பழனிசாமி ஓரம்கட்டப்படுவார்" - ப...
கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான கோவா கப்பல் கட்டுமான நிறுவனம், இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் நட்பு நாடுகளுக்கான கப்பல்களை வடிவமைத்தல் மற்றும் பழுது பார்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் பொறியியல் பட்டதாரிகள், சிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 06/2025
பணி: Management Trainee
துறை வாரியான காலியிடங்கள் விவரம்:
1. Machanical
காலியிடங்கள்: 9
2. Electrical
காலியிடங்கள்: 5
3. Electronics
காலியிடங்கள்: 2
4. Naval Architecture
காலியிடங்கள்: 12
5. Finance
காலியிடங்கள்: 2
6. Robotics
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ. 40,000- 1,40,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், நாவல் ஆர்க்கிடெச்சர், ரோபாட்டிக்ஸ், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஏஐ போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் முடித்தவர்கள், சிஏ, ஐசிஎம்ஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 31.7.2025 தேதியின்படி 28-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினிவழித் தேர்வு அல்லது எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.goashipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 24.9.2025
மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.