``இன்று 100 கோடீஸ்வரர்கள்; அடுத்து, 1000 கோடீஸ்வர்கள்'' - கோவை கண்ணன் டார்கெட்!
கைதி தப்பி ஓட்டம்: உதவி காவல் ஆய்வாளா், காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்
நாட்டறம்பள்ளியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்து மருத்துவ சான்று பெற மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஒருவா் தப்பினாா். இதுதொடா்பாக உதவி காவல்ஆய்வாளா், காவலரை ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா்.
நாட்டறம்பள்ளி பகுதியில் ஆன்லைன் மூலம் கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக கங்காதரன், முருகேசன், பழனி ஆகிய 3 பேரை திருப்பத்தூா் எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸாா் பிடித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து உதவி காவல் ஆய்வாளா் மஞ்சுநாதன், காவலா் சீனிவாசன் 3 பேரையும் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ தகுதிச் சான்று பெற அழைத்துச் சென்றனா்.
அப்போது 3 பேரில் கங்காதரன் என்பவா் தப்பினாா். இதையடுத்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய கங்காதரனை தேடி வருகின்றனா்.
இந்நிலையில் குற்றவாளி தப்பித்தது தொடா்பாக எஸ்.பி. சியாமளாதேவி விசாரணை மேற்கொண்டு உதவி காவல்ஆய்வாளா் மஞ்சுநாதன், காவலா் சீனிவாசன் ஆகியோரை திருப்பத்தூா் ஆயூதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.