செய்திகள் :

கைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு திரும்பிய +2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை... குமரியில் அதிர்ச்சி

post image

கன்னியாகுமரி மாவட்டம் கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஒரு பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த 25-ம் தேதி உடற்பயிற்சி ஆசிரியர் கைப்பந்து போட்டியில் கலந்துகொள்ள திருச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் 26-ம் தேதி இரவு 9-மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு திரும்பி வந்துள்ளனர். மற்ற மாணவிகளை அழைத்துச் செல்ல பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். ஆனால், இந்த மாணவி தன்னை அழைக்க தந்தை இப்போது வந்து விடுவார் எனக்கூறி பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம்

பள்ளிக்கு வெளியே அந்த மாணவி சாலை ஓரத்தில் நின்றதை பார்த்து அங்கு நின்ற 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் 'ஏன் இங்கு நிற்கிறாய்' எனக்கேட்டுள்ளார். அதற்கு பாத்ரூம் செல்ல வேண்டும் என அந்த மாணவி கூறியுள்ளார். உடனே அருகில் இருக்கும் வீட்டை காட்டி 'இது எனது  வீடு தான் நீ மேலே மாடியில் பாத்ரூம் சென்று வா' என கூறியுள்ளார். அவர் மேலே பாத்ரூம் சென்று விட்டு கீழே இறங்கி வந்த போது, அவரை அந்த ஆசாமி  வலுக்கட்டாயமாக இழுத்து அருகில் உள்ள ஒரு அறைக்குக் கொண்டு சென்று  பூட்டி வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமி பலமாக கத்தியதால் வெளியே அனுப்பி உள்ளார். பின்னர் சிறுமி அழுதபடி வீட்டிற்கு சென்றுள்ளார். இதைப் பார்த்ததும் அதிர்ந்து போன பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மணலிக்கரையைச் சேர்ந்த பைசல் கான் (37) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே மாணவியை அவரது காதலன் அழைத்துச் சென்று சில மணி நேரத்துக்குப்பின் பைசல்கானின் வீட்டில் கொண்டு விட்டதாகவும். அந்த மாணவியை அழைத்துச் சென்ற இளைஞன் இதுபோன்று வேறு மாணவிகளையும் அழைத்துச் சென்றதாகவும் இளைஞர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

போக்ஸோ வழக்கு

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "பள்ளி மாணவி திருச்சியில் இரவு 9 மணியளவில் பள்ளிக்கு வந்துள்ளார். அதன் பிறகுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவி வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இதில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளதாக மாணவி தரப்பில் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம். மாணவியின் காதலனான ரெஜீஸ் குமார்(21) என்பவர் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். அண்ணா பல்கலை கழக வளாகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி மாறுவதற்குள் குமரியில் பள்ளி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

Karnataka: புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் `பாலியல் அத்துமீறல்' - DSP கைது!

கர்நாடகாவில் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ பரவவியதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.58 வயதான ராமசந்திரப்பா துமகுரு மாவட்டம் மதுகிரியில் பணியாற்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி மர்ம மரணம்; உடலை வாங்காமல் போராடும் உறவினர்கள்... நடந்தது என்ன?

புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் நர்சிங் படித்து வந்த மாணவியை காணாமல் போனதாக, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் அவரது தந்தை வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நேற்றைய தினம... மேலும் பார்க்க

கும்பகோணம்: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை... போக்சோவில் பேராசிரியர் கைது!

மயிலாடுதுறை பகுதியை சேர்ந்தவர் ஜியாவுதீன்(43). இவர் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அரபி வகுப்பு எடுக்கும் பேராசிரியராக பணியாற்றினார். கும்பகோணம் அருகே உள்ள பகுதிய... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வேலூர் மாநகராட்சிப் பணியாளர் `போக்சோ’ சட்டத்தில் சிறையிலடைப்பு

வேலூர் விருப்பாட்சிபுரம், மாந்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப்குமார் (60).இவர், வேலூர் மாநகராட்சியில் துப்புரவு செய்யும் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வையிடும் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்... மேலும் பார்க்க

Gujarat: பிறப்புறுப்பில் இரும்பு ராட்... 10 வயது சிறுமிக்கு கொடூர பாலியல் வன்கொடுமை

குஜராத்தில் 36 வயது நபர் தனது பக்கத்து வீட்டு 10 வயது சிறுமியைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தற்போது வெளியில் தெரிய வந்திருக்கிறது.போலீஸாரின் கூற்றுப்படி, பரூச் (Bharuch) நகரில் ஜகாடியா... மேலும் பார்க்க

Mumbai: தனியாக நடைபயிற்சி சென்ற மனைவி; கோபத்தில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன்..!

முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்யும் முறையை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. ஆனாலும் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது மட்டும் இன்னும் முழுமையாக நின்றபாடில்லை. தொடர்ந்து நாட்டில் ஆங்... மேலும் பார்க்க