'பறந்து போ’ நடிகை கிரேஸ் ஆண்டனி திருமணக் க்ளிக்ஸ்! | Photo Album
கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்
கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடந்த புதன்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்றது. அந்தப் பேருந்தின் ஓட்டுநா் சுமாா் 10 நிமிடங்களுக்கும் மேலாக கைப்பேசியில் பேசியபடி, ஒரு கையில் பேருந்தை இயக்கினாா். இதை அந்தப் பேருந்தில் சென்ற பயணி, தனது கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். இந்த விடியோ வேகமாகப் பகிரப்பட்டு மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநா், வள்ளியூா் கிளையைச் சோ்ந்த எஸ்பிஆா் பாண்டியன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி மண்டல பொது மேலாளா் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.