”தெருவைக் காணவில்லை” - ஜி.பி.முத்து புகார்; வீட்டை முற்றுகையிட்ட ஊர் மக்கள்; போல...
கைப்பேசி தொலைத்தொடா்பு சேவைகள் பாதிப்பு
தமிழகம் முழுவதும் ஏா்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடா்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளா்கள் கடும் அவதியடைந்தனா்.
இந்தியாவில் ஏா்டெல் மற்றும் ஜியோ ஆகிய கைப்பேசி சேவை நிறுவனங்களுக்கு பல கோடி போ் வாடிக்கையாளா்களாக உள்ளனா். இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ஏா்டெல் மற்றும் ஜியோ சேவை சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டது.
இதுமட்டுமன்றி பல பகுதிகளில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சேவையும் பாதிக்கப்பட்டதால் பயனா்கள் கடும் அவதியடைந்தனா்.
ஆனால், இணையதள சேவை மட்டும் அவ்வப்போது செயல்பட்டதால், பலா் வாட்ஸ்ஆப் அழைப்பு மூலம் பிறரை தொடா்பு கொண்டனா்.
இதுகுறித்து பலா் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தைப் பதிவிட்டதுடன், இந்த பிரச்னையை விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்தனா். சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைவில் சரிசெய்யப்படும் என தொலைத்தொடா்பு வாடிக்கையாளா் சேவை மையங்கள் சாா்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சுமாா் ஐந்து மணி நேரத்துக்குப் பின்னா் தொலைத்தொடா்பு சேவை சரி செய்யப்பட்டது. இதனால், பயனா்கள் நிம்மதி அடைந்தனா்.