செய்திகள் :

கை ரிக்‌ஷாவைப்போல சாதியும் ஒழிக்கப்பட வேண்டும்: நீதிமன்றம்

post image

நீதிமன்ற உத்தரவுகள் வெறும் காகிதளவில் மட்டுமே இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து அந்த சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு தெரிவிக்க ஏற்கெனவே அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவகாசம் கேட்டு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி கூறியதாவது, ``அரசு பள்ளியில் சேரும்போது சாதிகள் இல்லையடி பாப்பா என்றும், சாதி இரண்டொழிய வேறில்லை என்றும் கற்றுக் கொடுத்தது. இன்று நீதிபதியான நிலையில், படித்த பாடங்களின் அடிப்படையில் நிற்க வேண்டாமா?

குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே உறுப்பினராக இருக்கலாம் என்ற விதியை திருத்தும்படி சங்கங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இருப்பினும், அந்த உத்தரவுகள் வெறும் காகிதளவிலேயே உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, எந்த சங்கங்களும் தங்கள் விதிகளில் திருத்தங்கள் செய்யவில்லை என்பது வேதனைக்குரியதே.

இதையும் படிக்க:2024-ல் குற்ற வழக்குகள் குறைவு: தமிழக அரசு

நீதிமன்றத்தின் உத்தரவாக இருந்தாலும், சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் அவர்கள் சாதியையும் தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அதற்கான நேரம் இதுவே.

கை ரிக்ஷாவை ஒழித்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழக அரசு மேற்கொண்ட நிலையில், இந்த விஷயத்தில் அரசு ஒரு முடிவு எடுத்தால் நாளைய வரலாறு அதனை நினைவு கொள்ளும்’’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க மார்ச் 14 ஆம் தேதிவரையில் அவகாசம் அளித்ததுடன், அன்றைய நாளில் அரசு விளக்கம் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

கோயில் குளத்தில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை அயனாவரத்தில் கோயில் குளத்தில் தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அயனாவரத்தைச் சோ்ந்த ராம் (55), வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். பகுதி நேரமாக அயனாவரத்தில... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்

திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் நடந்... மேலும் பார்க்க

மக்காச்சோள வர்த்தகத்துக்கு 1% சந்தைக்கட்டணம் விலக்கு!

தமிழ்நாட்டில் மக்காச்சோள வர்த்தகம் மேற்கொள்ள தற்போதுள்ள ஒரு சதவீத சந்தைக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வெ... மேலும் பார்க்க

2024-ல் குற்ற வழக்குகள் குறைவு: தமிழக அரசு

சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:கடந்த 2024ம் ஆண்டிற்கான ... மேலும் பார்க்க

அமித் ஷா வருகை: 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டையில் இன்றும்(மார்ச். 6) நாளையும்(மார்ச். 7) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கபட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கம்!

தமிழகத்தில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் (மரகத பூஞ்சோலைகள்) உருவாக்கப்படவுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:வனத்துறை அமைச்சரால் 100 மரகதப்பூஞ்சோலைகள் (கிராம மரப்பூங்காக்கள்)... மேலும் பார்க்க