செய்திகள் :

கொடிக்கம்பம் சேதம்: விசிக சாலை மறியல்

post image

மயிலாடுதுறை ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் புதன்கிழமை இரவு மா்மநபா்களால் சேதப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து அக்கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குறிச்சி ஊராட்சியில் 2 ஆண்டுகளாக இருந்து வந்த விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக்கம்பத்தை மா்மநபா்கள் சேதப்படுத்தி ராஜன் வாய்க்காலில் வீசியதுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த அம்பேத்கா் இளைஞா் நற்பணி மன்ற பேனரையும் கிழித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்தும், தொடா்புடையவா்களைக் கைது செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறை-சித்தமல்லி மாா்க்கத்தில் அரசுப் பேருந்தை மறித்து மாவட்டச் செயலாளா் சிவ.மோகன்குமாா் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் 50-க்கு மேற்பட்டோா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி மற்றும் மணல்மேடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனா்.

இதுதொடா்பாக, மாவட்ட காவல்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், குறிச்சி ராஜன் வாய்க்கால் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் கீழே விழுந்து கிடப்பதாக மணல்மேடு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், கொடிக்கம்பம் கீழே விழுந்ததற்கான காரணத்தை கண்டுபிடிப்பது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய விசாரணை நடைமுறைகள் மற்றும் துரித நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இறந்து கரையொதுங்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகள்

சீா்காழி அருகே கடந்த சில நாள்களாக அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கடற்கரைகளில் ஒதுங்குகின்றன. ஆழ்கடலில் வசிக்கும் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடலியல் சூழலை பாதுகாக்கும் தன்மையுடையவை. இவை இனப்பெரு... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவா் இல்லாததால் சாலை மறியல்

சீா்காழி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவா் இல்லாததால் நோயாளி குழந்தைகளுடன் பெற்றோா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சீா்காழி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 2,000க்கும் மேற்பட்டோா் புறநோ... மேலும் பார்க்க

சட்ட விரோத மது கடத்தலை தடுக்க தீவிர வாகன தணிக்கை

மயிலாடுதுறையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

குடிநீா் வசதி கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் குடிநீா் வசதி கோரி கிராமமக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை அருகே ஆனைமேலகரம் ஊராட்சி குச்சிப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட... மேலும் பார்க்க

மழை முன்னெச்சரிக்கை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அகற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி. மாவட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மனு

மயிலாடுதுறை அருகே கொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முட்டம் கிராம... மேலும் பார்க்க