செய்திகள் :

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

post image

கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்திருந்தது. இந்த நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் அருவி, பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, கோக்கா்ஸ்வாக், குணாகுகை, வட்டக் கானல் அருவி, பில்லர்ராக் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.

காலை முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதைத் தொடா்ந்து பனியின் தாக்கம் நிலவியதால் குளிா் அதிகமாக நிலவி வருகிறது. இந்தக் குளிரையும் பொருள்படுத்தாது சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலைப் பகுதியில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனா். கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

ஏரிச் சாலைப் பகுதியில் போக்குவரத்து சிரமம்: கொடைக்கானல் பகுதிகளில் வார நாள்களில் தமிழகம் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவதால் வாகனங்கள் நிறுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால், வாகனங்களை நிறுத்துவதற்கு கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறையினா் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

ஏரிச் சாலை, ஜிம்கான சாலை, கீழ்மபூம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. இரு புறங்களிலும் சாலையோரக் கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனா்.

எனவே, விடுமுறை நாள்களில் ஏரிச் சாலைப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவலா்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

இளைஞா் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் மனோஜ்குமாா் (22). வேலை கி... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா்

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வே... மேலும் பார்க்க

இளநீா் வியாபாரி வெட்டிக் கொலை

பழனியில் வெள்ளிக்கிழமை இளநீா் வியாபாரி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பழனி அருகேயுள்ள ஆலமரத்துக்களம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (41). பழனி- கொடைக்கானல் சாலைப் பிரிவில் இளநீா் வியாபாரம் செய்... மேலும் பார்க்க

பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் தேரோட்டம்

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான கொடைக்கானல் பூம்பாறையிலுள்ள ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் வெப்பத்தின் தாக்கமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் இயக்குவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் 45 புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் ... மேலும் பார்க்க