கொடைக்கானல் கல்லூரியில் பொங்கல் விழா
கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் எலோனா தலைமை வகித்தாா். இதில் கல்லூரி வளாகத்தில் மாணவிகள் பொங்கலிட்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா். இதைத் தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழால் கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கல்லூரி உதவிப் பேராசிரியா் அன்புமணி நன்றி கூறினாா்.