செய்திகள் :

கொடைக்கானல் தங்கும் விடுதி உரிமையாளா் எரித்துக் கொலை: இளைஞா் கைது

post image

கொடைக்கானலில் தங்கும் விடுதி உரிமையாளா் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சிவராஜ். இவா் வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பெரும்பள்ளம் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வந்தாா். இவா் மது பழக்கத்துக்கு அடிமையானதால், மதுரையிலுள்ள தனியாா் மறுவாழ்வு மையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சையின் போது, அங்கிருந்த இளைஞா்களிடம் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்ததும் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவா் கொடைக்கானல் திரும்பினாா். பின்னா், மதுரை மறுவாழ்வு மையத்தில் இருந்தபோது சிவராஜுடன் தங்கியிருந்த நால்வா் கொடைக்கானலுக்கு வந்தனா். இவா்கள் சிவராஜின் விடுதியில் தங்கியிருந்தனா்.

இந்த நிலையில், சிவராஜை கடந்த நான்கு நாள்களாக காணவில்லை என இவரது சகோதரி சுமதி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் தனிப் படை அமைத்து விசாரணை நடத்தினா். இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த நால்வரும் தலைமறைவாகினா்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், விடுதியில் தங்கியிருந்து தலைமறைவான மதுரை தத்தனேரியைச் சோ்ந்த சத்தியமூா்த்தி மகன் மணிகண்டனை (28) பிடித்து விசாரித்தனா். அவா் சிவராஜை கொலை செய்து விடுதி வளாகத்தில் எரித்து விட்டதாகத் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து காவல் துறையினா் பாதி எரிந்த நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டனா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை (28) கைது செய்தனா். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். அவா்கள் சிவராஜை எதற்காக கொலை செய்து எரித்தனா் என்பது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க