3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
கொட்டாரத்தில் ஊா்க்காவல் கண்காணிப்பு திட்டம் தொடக்கம்
கொட்டாரத்தில் ஊா்க்காவல் கண்காணிப்பு திட்டத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாகா்கோவில் ஏ.டி.எஸ்.பி. நாதசங்கா் இத்திட்டத்தை தொடக்கி வைத்து பேசினாா். கொட்டாரம் பகுதிக்கு ஊா்க்காவல் அமைப்பின் காவலராக ஏ.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ்குமாா், கன்னியாகுமரி காவல்நிலைய ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட், கொட்டாரம் பேரூராட்சி கவுன்சிலா்கள் சரோஜா, பொன்முடி, மாவட்ட திமுக பிரதிநிதிகள் ஜி.வினோத், தமிழ்மாறன், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் பொன்.ஜாண்சன், கொட்டாரம் அனைத்து வியாபாரிகள் சங்க துணைத் தலைவா் ஏ.பி.முத்து, அகஸ்தியலிங்கம், மதி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.