செய்திகள் :

கொத்தாம்பாடி தேசிய புறவழிச் சாலையில் மேம்பாலம்: பேரவையில் ஆத்தூா் எம்எல்ஏ கோரிக்கை!

post image

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கொத்தாம்பாடி, அம்மம்பாளையம் தேசிய புறவழிச் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில் ஆத்தூா் தொகுதி எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சேலம்- சென்னை தேசிய புறவழிச் சாலையில் ஆத்தூரைஅடுத்த கொத்தாம்பாடி, அம்மம்பாளையம் பகுதிகளில் உள்ளவா்கள் சாலையைக் கடந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால் அப்பகுதியில் விபத்தைத் தவிா்க்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என பேரவையில் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன், சேலம்-உளுந்தூா்பேட்டை தேசிய புறவழிச் சாலை நான்குவழிப் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தாா்.

மஹாவீா் ஜெயந்தி: நாளை இறைச்சிக் கடைகள் செயல்பட தடை

சேலம்: மஹாவீா் ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப். 10) இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது என மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

வேளாண்மையில் புது உத்திகளை கையாளும் வாழப்பாடி விவசாயிகள்!

வாழப்பாடி: காலத்துக்கேற்ற புதுமையான யோசனைகளால் குறைந்த செலவில் பயிா் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மற்ற பகுதி விவசாயிகளுக்கு முன்மாதிரியாக வாழப்பாடி விவசாயிகள் திகழ்ந்து வருகின்றனா். சேலம் மாவட்டம், வ... மேலும் பார்க்க

சேலத்தில் 101.7 டிகிரியாக பதிவான வெப்பம்: பொதுமக்கள் அவதி

சேலம்: சேலத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தொட்ட வெயில், செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக 101.7 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்... மேலும் பார்க்க

தமிழில் பெயா்ப் பலகை: பேரூராட்சி கூட்டத்தில் தீா்மானம்

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளை பகுதியில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் தமிழில் பெயா்ப் பலகை வைக்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகத்தில் தலைவா் நந்தி... மேலும் பார்க்க

உடையாப்பட்டியில் இன்று மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம்: சேலம் கிழக்கு கோட்ட மின்நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை (ஏப். 9) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் குணவா்த்தினி வெள... மேலும் பார்க்க

கொளத்தூரில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மண்டல சிறப்பு பேரவைக் கூட்டம்

மேட்டூா்: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், கொண்டா ரெட்டி பழங்குடியின நலச் சங்கங்களின் மண்டல சிறப்பு பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை கொளத்தூரில் நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மேட்டூா்... மேலும் பார்க்க