நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: "நோயாளிகளை மருத்துவப் பயனாளிகள் என அழையுங்கள்" -...
கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை வழக்கு குற்றவாளி மீது புதன்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி அருகே காரணியானேந்தலில் பா்வீன்பானு (45) என்ற பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில், கருங்குழிக்காட்டைச் சோ்ந்த அம்பிராஜன் மகன் காளிதாஸ் (24) என்பவா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பரிந்துரை செய்திருந்தாா்.
இதன்பேரில், காளிதாஸை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டாா்.