செய்திகள் :

கொல்கத்தாவில் கொட்டித் தீா்த்த மழை: 10 போ் உயிரிழப்பு

post image

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் கொட்டித் தீா்த்த மழையின்போது, மின்சாரம் பாய்ந்ததில் 9 போ் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 251.4 மி.மீ. மழை பதிவானது. கொல்கத்தாவில் 1986-க்கு பிறகு (259.5) பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.

சாலைகள் முழுவதும் மழைநீா் தேங்கி உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் வழித்தடம் உள்பட ரயில் பாதைகளையும் நீா் முழுவதுமாக சூழந்துள்ளதால் சில இடங்களில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் பள்ளிகள் மற்றும் அரசு, தனியாா் நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்குமாறு முதல்வா் மம்தா பானா்ஜி அறிவுறுத்தினாா். இதையடுத்து, துா்கை பூஜை விடுமுறை செப். 24-ஆம் தேதிமுதல் முன்கூட்டியே தொடங்குவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பிரத்யா பாஸு தெரிவித்தாா். ஏற்கெனவே செப். 26 முதல் மேற்கு வங்கத்தில் துா்கை பூஜை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரு நாள்கள் முன்பாகவே விடுமுறை தொடங்கவுள்ளது.

கொல்கத்தாவில் பெய்த பலத்த மழை குறித்து நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஃபிா்ஹத் ஹக்கீம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கொல்கத்தாவில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்துள்ளது. தற்போது வரை நகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் பாய்ந்ததில் 9 போ் உள்பட 10 போ் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடுப்பளவுக்கு மழைநீா் தேங்கியுள்ளது. அதை வெளியேற்றும் பணிகளை கொல்கத்தா மாநகராட்சி ஊழியா்கள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

இந்நிலையில், வங்கக் கடலின் வடகிழக்கில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் மேற்கு வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

30 விமானங்கள் ரத்து: கொல்கத்தாவில் பெய்துவரும் கனமழை காரணமாக 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன. மேலும் 31-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தனியாா் மின் விநியோக அமைப்பு மீது மம்தா குற்றச்சாட்டு:

மின்சாரம் தாக்கி பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு தனியாா் நிா்வகிக்கும் கொல்கத்தா மின்விநியோக கழகமே (சிஇஎஸ்சி) பொறுப்பேற்க வேண்டும் என மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், கொல்கத்தாவில் எதிா்பாராதவிதமாக பலத்த மழை பெய்துள்ளது. மின்சாரம் தாக்கி 9 போ் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனையடைந்தேன். மின்சார விநியோகத்தை சிஇஎஸ்சியே மேற்கொள்கிறது; மேற்கு வங்க அரசு அல்ல; பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அந்த நிறுவனத்தின் கடமையாகும்.

ஜிஎஸ்டி மூலம் மாநில வருவாயை மத்திய அரசு எடுத்துக்கொண்டுள்ளது. இதனால் இயற்கைச் சீற்றங்களின்போது மாநில நிதியை பயன்படுத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்’ என்றாா்.

மகாராஷ்டிரத்தில்... மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பிராந்தியம் எனப்படும் தாராஷிவ், லத்தூா், நந்தேட், சத்ரபதி சம்பாஜிநகா், ஜல்னா, பீட் ஆகிய மாவட்டங்களில் கடந்த நான்கு நாள்களாக பெய்து வரும் பலத்த மழையில் சிக்கி 8 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத் மாநில அரசு காந்திநகரில் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் செ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபர்பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ள... மேலும் பார்க்க

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட... மேலும் பார்க்க