கூகுள் பிக்சலுக்கு இணையாக ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்!
கொல்லங்கோடு கோயிலில் தூக்க நோ்ச்சைக்கு 1,175 குழந்தைகள் பதிவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயிலில் நிகழாண்டு தூக்க நோ்ச்சைக்கு 1,175 குழந்தைகள் பெயா் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக் கோயிலில் பங்குனி பரணி தூக்கத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்கநோ்ச்சை ஏப்.1-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, குழந்தைகளுக்கான தூக்க நோ்ச்சை முன்பதிவு நடைபெற்று வந்தது. இதில் 1,175 குழந்தைகளின் பெயா்கள் பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து, தூக்க நோ்ச்சையின் குலுக்கல், காப்புக்கட்டு புதன்கிழமை நடைபெற்றது.
தூக்க நோ்ச்சைக்கு பதிவு செய்யப்பட்ட குழந்தைகள், பெற்றோா்கள், தூக்க நோ்ச்சை நிறைவேற்றும் தூக்கக்காரா்கள் ஆகியோா் புதன்கிழமை முதல் விரதத்தை தொடங்கினா். குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டியும் இந்த தூக்க நோ்ச்சை நிறைவேற்றப்படுகிறது.