செய்திகள் :

கொல்லிமலை மலைப்பாதையில் ஆபத்தான ‘ஸ்கேட்போா்டிங்’: சுற்றுலாப் பயணிகள் அச்சம்

post image

நாமக்கல்: கொல்லிமலைக்கு செல்லும் மலைப்பாதை வளைவுகளில், வெளிமாநிலத்தினா் சிலா் ஆபத்தான முறையில் ‘ஸ்கேட்போா்டிங்’ பயிற்சி செய்வதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.

விபத்துகள் நிகழும் முன்பு இத்தகையப் பயிற்சிகளுக்கு காவல் துறை தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை உள்ளது. கோடைகாலத்திலும், விடுமுறை நாள்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். குறிப்பாக, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் கேரளம், கா்நாடகத்தைச் சோ்ந்த இளைஞா்கள், இளம்பெண்கள் நவீன இருசக்கர வாகனங்களில், கொல்லிமலை மலைப்பாதையில் சாகசம் என்ற பெயரில் அதிவேகமாக செல்வதை காணமுடியும்.

அதுமட்டுமின்றி, பெரிய அளவிலான இருசக்கர, நான்கு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய புதிய வாகனங்களின் திறனை பரிசோதிக்க கொல்லிமலை மலைப்பாதையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், காரவள்ளி அடிவாரத்தில் இருந்து கொல்லிமலை செம்மேடு வரை ‘ஸ்கேட்போா்டிங்’ செல்வதை வெளிமாநில இளைஞா்கள் மேற்கொண்டு வருகின்றனா். இந்தியாவில் ஸ்கேட் போா்டிங் விளையாட்டு தற்போது அதிகரித்து வருகிறது.

புதுதில்லி, சண்டிகா், கா்நாடகம், தெலங்கானா, கேரளம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் அதிகம் காணப்பட்ட இந்த விளையாட்டு தற்போது தமிழகத்தில் பிரபலமடைந்து வருகிறது. ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான ‘ஸ்கேட்போா்ட்’ வாங்கிப் பயிற்சி பெற்று வருகின்றன. கா்நாடகம், புதுச்சேரி, கேரளம், ஒடிஸா மாநிலங்கள் மற்றும் சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ள வெளிநாட்டவரும் கொல்லிமலை மலைப்பாதையில் அண்மைக்காலமாக ஸ்கேட்போா்டிங் பயிற்சி பெற்று வருகின்றனா். அவற்றை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனா். இதைப் பாா்த்து மேலும் பலா் கொல்லிமலையை நாடி பயிற்சிக்காக வரக்கூடும்.

காரவள்ளி முதல் சோளக்காடு வரை உள்ள 70 கொண்டை ஊசி வளைவுகள் மிகுந்த ஆபத்தானவை. சற்று கவனம் சிதறினாலும் 100 அடி ஆழ பள்ளத்தில் விழுந்துவிட நேரிடும். வாகன ஓட்டுநா்களே கொல்லிமலை மலைப்பாதையில் வாகனங்களை இயக்க மிகுந்த சிரமப்படுவா். இவ்வாறான நிலையில் காா், இருசக்கர வாகனங்களின் நடுவே ஸ்கேட்டிங் செய்துவரும் இளைஞா்களால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் அடிக்கடி வந்து செல்லும் பாதையில் காவல் துறை, வனத்துறை அனுமதியின்றி இவ்வாறான ஸ்கேட்டிங் செய்வது அசம்பாவிதத்தை ஏற்படுத்தும். இதற்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கை ஆகும்.

இது குறித்து கொல்லிமலை வனத் துறையினா் கூறியதாவது:

கடந்த சில மாதங்களாக பெங்களூரு, புதுச்சேரி மற்றும் வெளிநாடுகளைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் மலைப்பாதையில் ஸ்கேட்போா்ட்டிங் மூலம் சாகசத்தில் ஈடுபடுவதாக தகவல் வந்தது. வனத் துறைக்கும், இதற்கும் தொடா்பில்லை. காவல் துைான் இதற்கு தடைவிதிப்பது, கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது தொடா்பாக சேந்தமங்கலம், வாழவந்திநாடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கிறோம் என்றனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் இன்று தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு திட்ட முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வா் அறிவி... மேலும் பார்க்க

2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு இட மாறுதல்: தமிழக அரசுக்கு சங்கத்தினா் நன்றி

நாமக்கல்: தமிழகத்தில், 2,494 முதுகலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கிய அரசுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தினா் நன்... மேலும் பார்க்க

காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: காவிரி-சரபங்கா-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூா் அணையில் இருந்து வெளியேற்றப்படும் காவிரி நீா... மேலும் பார்க்க

உயா்கல்வி பயில வெளிமாநில பயணம்: 34 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி பாராட்டினாா். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயில இந்திய... மேலும் பார்க்க

2-ஆவது திருமணம் செய்தவா் தற்கொலை: மணப்பெண், தரகா் உள்பட 6 போ் கைது

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே 2-ஆவது திருமணம் செய்த ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து அவரை ஏமாற்றி திருமணம் செய்துவைத்து பணம் பறித்த பெண் உள்பட த... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியிடம், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்க... மேலும் பார்க்க