இந்தியா மீது கூடுதல் வரி! ஜி7 நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம்!
கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யலாம்
நாகை மாவட்ட விவசாயிகள் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்தில் விவசாயிகள் நலன்கருதி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தால் 2025-2026 குறுவை பருவத்துக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் செப்.15-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதால், விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.