செய்திகள் :

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

post image

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(ஆகஸ்ட் 20) காலை 8.00 மணியளவில் அதன் முழு கொள்ளளவான 120.130 அடியை எட்டியதாலும் அணைக்கு வரும் நீர்வரத்து 1,14,098 கன அடியாக உள்ளதாலும் அணைக்கு வரும் உபரிநீர் காவிரி ஆற்றில் 90,000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மேலணை மற்றும் கல்லணையிலிருந்து இன்று காலை 6.00 மணியளவில் சுமார் 37,802 கன அடி உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கீழணையிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நள்ளிரவு 12.00 மணியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 5,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. மேலும் இது படிப்படியாக நீர்வரத்திற்கேற்ப உயர்த்தப்பட்டு இரண்டு மூன்று நாள்களில் கொள்ளிடம் ஆற்றில் 90,000 கன அடி நீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனால், கடலூர் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களின் கொள்ளிட ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றைக் கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் கொள்ளிடம் கீழணை உதவி செய்ய பொறியாளர் தெரிவித்துள்ளார்.

A flood warning has been issued for residents along the Kollidam coast as the water level of the Mettur Dam has reached its full capacity.

மதுரையில் சட்டவிரோத பதாகைகளை 1 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை 1 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.மதுரையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பதாக... மேலும் பார்க்க

தவெக மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழக வெற்றிக் கழகத்தில் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது “வெற்றி... மேலும் பார்க்க

தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நாளை(ஆக.20) நடைபெறும் 2-வது மாநில மாநாட்டுக்காக நட முயன்ற 100 அடி உயர கொடி மரம் கார் மேலே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.2026 ஆம் ஆண்டு பேரவைத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு!

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்... மேலும் பார்க்க

தவெக மாநாட்டில் பிளக்ஸ் பேனர் வைக்க முயன்ற மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம்கரிசல் குளத்தில் தவெக மாநாட்டிற்கு பிளக்ஸ் பேனர் வைப்பதற்காகக் கம்பி எடுத்து வந்தபோது மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவ... மேலும் பார்க்க

50 ஆம் ஆண்டு திருமண நாள்! மனைவி துர்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

50 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி, மனைவி துர்காவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.திருமண நாளை முன்னிட்டு மறைந்த திமுக தலைவரும் தனது தந்தையுமான மு. கருணாநிதியின் நின... மேலும் பார்க்க