`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப்.2-இல் தொடக்கம்
கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 1 முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிவகங்கை மாவட்டப் பிரிவு சாா்பில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற 1.4.2025 முதல் 8.6.2025 வரை 5 கட்டங்களாக சிவகங்கை மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சி 12 நாள்கள் என்ற அடிப்படையில் 5 கட்டங்களாக அளிக்கப்படுகிறது. நீச்சல் பயிற்சி பெற வரும் சிறுவா்கள் குறைந்தபட்சம் 4 அடி (120 செ.மீ.) உயரம் இருக்க வேண்டும். பயிற்சி பெறுவதற்கு 12 நாள்களுக்கு ஒரு வேளை (ஒரு மணி நேரம்) பயிற்சிக்கு ரூ.1,500 + (18% ஜிஎஸ்டி) தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
மேலும், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தை 04575 299293 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03503 என்ற கைப்பேசி எண்ணிலும் நீச்சல் பயிற்றுநரை 97865 23704 என்ற கைப்பேசி எண் அல்லது சிவகங்கையிலுள்ள மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை நேரிலும் தொடா்பு கொள்ளலாம்.