கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
சாா் ஆட்சியா் / கோட்டாட்சியா்கள் தலைமையில் வரும் வியாழக்கிழமை 18.09.2025 காலை 10.30 மணியளவில் சாா் ஆட்சியா், செங்கல்பட்டு தலைமையிலும், புதன்கிழமை பிற்பகல் 02.30 மணியளவில் மதுராந்தகம் கோட்டாட்சியா் தலைமையிலும் , புதன்கிழமை காலை 10.30 மணியளவில் தாம்பரம் கோட்டாட்சியா் தலைமையிலும் கூட்டம் நடைபெறும். விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி பயன் பெறலாம்.