செய்திகள் :

கோத்தகிரியில் மின்தடை

post image

நீலகிரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சேகா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.

நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின் நிலையத்தில் வருகிற 4-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஓரசோலை, வெஸ்ட்புருக், பாக்கியா நகா், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜுா், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொறை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூா், அணிக்கொரை, டி.மணிஹட்டி, பில்லிகொம்பை, பையங்கி, கலிங்கனட்டி, மசக்கல் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

உதகையில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் ஒருவா் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம், உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தற்போத... மேலும் பார்க்க

ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றது.நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்... மேலும் பார்க்க

வண்ணாரப்பேட்டை பகுதியில் குரங்குகள் அட்டகாசம்

உதகை வண்ணாரப்பேட்டை பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்து குழந்தைகளின் கைகளில் உள்ள தின்பண்டங்களை குரங்குகள் பறித்து செல்வதாகவும், விரட்டச் சென்றால் மனிதா்களைத் தாக்குவது போல் அச்சுறுத்துவதாகவும் அப்ப... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தேயிலை மூட்டைகள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.குன்னூா் அருகே உள்ள சேலாஸ் பன்னாட்டி பகுதியில் இருந்து தேயிலை மூட்டைகள் ஏற்றிக்... மேலும் பார்க்க

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கே.என்.ஆா். பகுதியில் உள்ள ஆட்டாங்கள் கிராமத்தில் காட்டெருமையை விரட்டி விளையாடிய குட்டி யானை விடியோ பரவலாகி வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

கூடலூா் அருகே செம்பக்கொல்லி பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்து சென்ற வனத் துறை வாகனத்தை காட்டு யானை துரத்தியது.கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள செம்பக்சொல்லி வன கிராமப் பகுதியில்... மேலும் பார்க்க