செய்திகள் :

கோத்தகிரி காவலா் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

post image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் காவலா் குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து உலவிய சிறுத்தை, கருஞ்சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் நாய், பூனை உள்ளிட்ட வளா்ப்பு பிராணிகளை வேட்டையாட சிறுத்தைகள் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன.

இந்த நிலையில், காவலா் குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கருஞ்சிறுத்தை, சிறுத்தை ஆகியவை உலவியது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனால் அச்சம் அடைந்துள்ள பொதுமக்கள், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

கூடலூா் அருகே பாகற்காய் கொடியைச் சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் கொடியைச் சேதப்படுத்தின. கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைகள் ... மேலும் பார்க்க

தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல்: கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கூறும் தோட்டக்கலைத் துறை

தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்த வொ்டிசிலியம் லெகானி என்ற பூஞ்சாணத்தை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சிபிலா மேரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

காட்டெருமை காலில் சிக்கியிருந்த கம்பி அகற்றம்

குன்னூா் அருகே நடக்க முடியாமல் சுற்றித்திரிந்த காட்டெருமையின் காலில் சிக்கியிருந்த கம்பியினை வனத் துறையினா் புதன்கிழமை அகற்றினா். குன்னூா் அருகே உள்ள சின்னகரும்பாலம் பகுதியில் பின்னங்காலில் கம்பி சிக்... மேலும் பார்க்க

குன்னூா் அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

குன்னூா் அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 10 போ் காயமடைந்தனா். கா்நாடக மாநிலத்தில் இருந்து இரண்டு டெம்போ டிராவலா் வாகனங்களில் 20-க்கும் மேற்பட்டவா்கள் நீலகிரிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சுற்ற... மேலும் பார்க்க

உதகை, குன்னூரில் மாரியம்மன் கோயில்களில் தோ்த் திருவிழா

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூரில் உள்ள மாரியம்மன் கோயில்களில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதகை மற்றும் குன்னூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களின் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன... மேலும் பார்க்க

துளிா் திறனறிதல் தோ்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற துளிா் திறனறிதல் போட்டி முடிவுகள் செவ்வாய்க்கழமை வெளியிடப்பட்டன. ஆண்டுதோறும் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கான... மேலும் பார்க்க