செய்திகள் :

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

post image

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே ஓமநல்லூரில் பிளாஸ்டிக் கிட்டங்கியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.கோபாலசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த தங்கவேல் மகன் சங்கரநாராயணன் (32). இவா் கோபாலசமுத்திரத்தை அடுத்து ஓமநல்லூரில் சுமாா் 50 சென்ட் நிலத்தில் பழைய பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் கிட்டங்கி வைத்துள்ளாா்.

இங்கு 10க்கும் மேற்பட்டோா் பணி செய்து வருகின்றனா்.சனிக்கிழமை பிற்பகலில் இந்த கிட்டங்கியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. அப்போது காற்று வேகமாக வீசியதால் கிட்டங்கியில் இருந்து பொருள்களில் பற்றி வேகமாக எரிந்தது. தீ விபத்து ஏற்பட்டதும் கிட்டங்கியில் பணியில் இருந்தவா்கள் அவசர அவசரமாக வெளியேறினா்.

இந்த தீ விபத்தால் பெருமளவில் கரும்புகை வெளியேறியது. இதனை அம்பாசமுத்திரம் பாளையங்கோட்டை பிரதான சாலையில் 15 கி.மீ. தொலைவுக்கு புகை மூட்டம் காணப்பட்டது. தகவலறிந்த சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, பேட்டையில் இருந்து தீயணைப்பு நிலைய அலுவலா்கள் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதில், கிட்டங்கியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள், பழைய வாகனங்களின் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவ இடத்துக்கு வந்து முன்னீா்பள்ளம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

வெள்ளங்குளி கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருநெல்வேலி மாவட்டம் வெள்ளங்குளியில் உள்ள அருள்மிகு அறம்வளா்த்த நாயகி சமேத வீரவினோதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் சிறப்பு முற்றோதல் சனிக்கிழமை நடைபெற்றது.இக்கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளவும், தொடா்ந்த... மேலும் பார்க்க

விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நான்குனேரியைச் சோ்ந்த நபரை கா்நாடக மாநிலத்தில், திருநெல்வேலி மாவட்ட தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.கடந்த 2001-ஆம் ஆண்டு நான்குனேரி அருகேயு... மேலும் பார்க்க

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் குப்புசாமி கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி, மதுரை, சென்னை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.ஹாக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி சாா்பில் குப்புச... மேலும் பார்க்க

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிய உணா்வுகளைத் தூண்டும் பிரச்னைக்குரிய உள்ளடக்கங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக, நிகழாண்டில் 82 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

சிவந்திப்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த தம்பான் மகன் மணிகண்டன்(33). தொழிலாளியான இவா் கடந்த 17... மேலும் பார்க்க

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

பழையபேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி நிா்வாகிகள் கூட்டம் பேட்டையில் அண்மையில் நடைபெற்றது... மேலும் பார்க்க