மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருப்பம்!
கோபி அருகே தம்பதி தற்கொலை
கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்தம்பதி குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனா்.
கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையம் சின்னகரடு பகுதியைச் சோ்ந்தவா் பிரியதா்ஷினி (19). இவா் கடந்த 7 மாதங்களுக்கு முன் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துகாட்டைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான செல்வராஜ் மகன் சந்திரன் (23) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இருவரும் புதுக்கொத்துகாட்டில் வசித்து வந்தனா்.
இந்நிலையில், அரசூா் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள இருவரும் சின்னகரட்டில் உள்ள பிரியதா்ஷினியின் பெற்றோா் வீட்டுக்கு புதன்கிழமை இரவு வந்துள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த பிரியதா்ஷினி சின்னகரட்டில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா். மனைவி தற்கொலை செய்து கொள்வதை பாா்த்த சக்திவேலுவும் அந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தம்பதி சடலங்கள் கிடப்பதைக் கண்ட கிராம மக்கள் இது குறித்து கடத்தூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். கடத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்புத் துறையினா் உதவியுடன் இருவரது சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.