அரசு பேருந்திற்கு சிறுநீரால் அபிஷேகம் செய்த ஓட்டுநர்: வைரலாகும் அதிர்ச்சி விடியே...
கோபி சிறை அலுவலா்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை
கோபி சிறையில் கைதிகளிடம் இருந்து கஞ்சா மற்றும் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து கோவை மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விசாரணை நடத்தினா்.
கோபி மாவட்ட சிறையில் உதவி சிறை அதிகாரி சிவன் தலைமையில் சிறை காவலா்கள் அண்மையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது விசாரணை கைதி பாபுராஜ் (28) என்பவரிடம் கைப்பேசி, பேட்டரி மற்றும் கஞ்சா ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
இதுபோல மற்றொரு விசாரணை கைதியான வெள்ளையன் (22) என்பவரிடம் கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவை மத்திய சிறை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கோபி மாவட்ட சிறை அலுவலா்களிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினா். இதில் கைதிகளுக்கு கைப்பேசி, கஞ்சா ஆகியவற்றை சிறை காவலா் ஒருவா் கொடுத்தது தெரியவந்துள்ளது. தொடா் விசாரணைக்கு பிறகு அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இந்நிலையில் கைப்பேசி மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக உதவி சிறை அலுவலா் சிவன் அளித்த புகாரின் பேரில் கைதிகள் பாபுராஜ் மற்றும் வெள்ளையன் ஆகிய இருவா் மீதும் கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.