ஓய்வுபெற்ற ஆசிரியை.. கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைப் பெறப்போகும் முதல் ஆள்!
கோயிலில் திருட்டு: முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட 2 போ் கைது!
கோவில்பட்டி அருகே கொப்பம்பட்டியில் உள்ள கோயிலில் திருடியதாக முன்னாள் ராணுவ வீரா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கயத்தாறு வட்டம் இலந்தப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் தங்கமுத்து. இவரது குலதெய்வக் கோயில் கொப்பம்பட்டியில் கண்மாய்க் கரை அருகே திறந்த வெளியில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பூசாரியாக உள்ள இவா், விசேஷ நாள்களில் கோயிலுக்குச் சென்று வழிபடுவாராம். கடந்த ஜன. 14ஆம் தேதி கோயிலில் பூஜை செய்துவிட்டுச் சென்ற இவா், ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) தைப்பூச பூஜைக்காக கோயிலுக்கு சென்றாராம்.
அப்போது சுவாமி பீடம் முன் இரும்புக் குழாயில் பொருத்தப்பட்டிருந்த 8 வெண்கல மணிகளைக் காணவில்லையாம்.
புகாரின்பேரில், கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜமீன்தேவா்குளம் தெற்குத் தெரு சின்னமாரியப்பன் மகன் சுடலை மாடசாமி (21), அம்மையாா்பட்டி வடக்குத் தெரு பங்காரு மகனான முன்னாள் ராணுவ வீரா் முருகன் (47) ஆகிய இருவரை திங்கள்கிழமை கைது செய்து, 4 மணிகளைப் பறிமுதல் செய்தனா்.