செய்திகள் :

கோயில் திருவிழாவின்போது வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

post image

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

ஓமலூா் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 14 நாள்களாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் நாள்தோறும் சுவாமி ஊா்வலம் வாணவேடிக்கையுடன் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

15-ஆவது நாள் திருவிழாவிற்காக பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு பக்தா்கள் கோயில் சீா்வரிசை வெள்ளிக்கிழமை எடுத்து சென்றனா்.

மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

முன்னதாக ஊா்வலத்தில் வெடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை மூட்டையாக எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது எரியூட்டப்பட்ட குப்பையில் இருந்து தீப்பொறி பறந்து இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசு மீது விழுந்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஓமலூா் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (29), சிறுவர்கள் கார்த்திக், தமிழ்ச்செல்வன் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓமலூா் டி.எஸ்.பி. சஞ்சீவ்குமாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினாா்.

உயிரிழந்தவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்விற்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்தில் காயம் அடைந்த 5-க்கும் மேற்பட்டோா் ஓமலூா் மற்றும் சேலம் அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லோகேஷ் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரர் அல்ல: கனிமொழி

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறினார்.கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்றுவரும்சுயமரியாதை இயக்க நூற்றாண்ட... மேலும் பார்க்க

நிலத்தடிநீரில் அதிக பாதரசம்: ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சி.க்கு ஒரு நீதியா? - அன்புமணி

கடலூர் என்.எல்.சி. நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 115 மடங்கு அதிக பாதரசம் உள்ளதாகவும் இதனால் என்.எல்.சியை உடனடியாக மூட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொ... மேலும் பார்க்க

முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! - முதல்வர் அறிவிப்பு

தமிழக முன்னாள் எம்எல்எக்ளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், "சட்டப்பேரவை மற்றும் மேலவையின் மு... மேலும் பார்க்க

கோவை வந்த விஜய்: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

தவெக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க கோவை வந்துள்ள விஜய்-க்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் இன்றும் நா... மேலும் பார்க்க

நாகையில் ரூ.1.5 கோடி திமிங்கல உமிழ் நீா் கட்டி பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகையில் கள்ளச் சந்தையில் விற்னைக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 1.5 கிலோ அம்பர் கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ் நீர் கட்டி வைத்திருந்த ஒருவரை சனிக்கிழமை போலீஸார... மேலும் பார்க்க

சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்கள் ரத்தம் ஒடும்: பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு

இஸ்லாமாபாத்: பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கப்போவதாக இந்தியா எடுத்த முடிவைத் தொடர்ந்து, சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்... மேலும் பார்க்க