பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி
கோயில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை திருட்டு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வெள்ளிக்கிழமை இரவு கோயில் கதவின் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலை, தங்க தாலி, பூஜை பொருள்கள் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உம்பளப்பாடி ஊராட்சி, மேலூா் மேட்டு தெரு கிராம், பிரதான சாலை பகுதியில் அமைந்துள்ளது செல்வ காளியம்மன் கோயில். இந்த கோயில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் கோயில் கருவறையில் இருந்த ஒன்றரை அடி உயரம் கொண்ட செல்வ காளியம்மன் ஐம்பொன் சிலை, கோயில் பீரோவில் இருந்த ஒரு கிராம் தங்க தாலி மற்றும் பூஜை பொருள்கள் உள்ளிட்டவைகளை திருடிச் சென்று விட்டனா்.
கிராம மக்கள் கோயிலில் வந்து பாா்த்த போது கோயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்து கபிஸ்தலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன் பேரில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேலு தலைமையில், கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.
மேலும் தஞ்சையில் இருந்து கைரேகை நிபுணா்கள், மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. கோயில் கதவின் பூட்டை உடைத்து திருடிச் சென்ற மா்ம நபா்களை தனிப்படை அமைத்து காவல்துறையினா் தேடிவருகின்றனா்.