செய்திகள் :

கோல்கீப்பிங்கில் மாஸ்டர் கிளாஸ்..! சாதனை படைத்த இன்டர் மிலன் கோல்கீப்பர்!

post image

இன்டர் மிலன் அணியின் கோல்கீப்பர் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் இன்டர் மிலன் அணி 4-3 (7-6) வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் இன்டர் மிலன் அணியின் டிஃபென்ஸ் மிகவும் பலமாக இருந்தது.

இரண்டாம் கட்ட அரையிறுதியில் பார்சிலோன அணி 72 சதவிகிதம் பந்தினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் பெரிதாக கோல்கள் அடிக்க முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் இன்டர் மிலனின் டிஃபெண்டர்கள் மட்டுமல்ல, அந்த அணியின் கோல் கீப்பர் யான் சோமரும்தான். 37 வயதான இவர் இந்த சீசனில் அசத்தி வருகிறார்.

இந்த சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவுடனான அரையிறுதியில் (இரண்டு கட்ட போட்டிகள்) 14 கோல்களை தடுத்துள்ளார்.

2ஆம் கட்ட போட்டியில் இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட 10 பந்துகளையும் தடுத்து அசத்தினார். அதனால்தான் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.

கடைசி 15 சீசன்களில் சாம்பியன்ஸ் லீக்கில் இவ்வளவு முறை தடுத்த கோல்கீப்பர்கள் வரிசையில் 2ஆம் இடம் பிடித்து யான் சோமர் சாதனை படைத்துள்ளார்.

ஆண்களின் திமிர்..! ஆடை குறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு தொகுப்பாளினி விளக்கம்!

நடிகை ஐஸ்வர்யா ரகுபதி தனது ஆடை குறித்து கேள்வி கேட்ட நிருபர் பற்றி பதிவிட்டுள்ளார்.கேப்டன் மில்லர் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரகுபதி. புதியதாக சில படங்களில் நடித்து வருகிறார். குறும்... மேலும் பார்க்க

தீபாவளி வெளியீட்டுக்கு போட்டிபோடும் திரைப்படங்கள்!

இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர அதிக படங்கள் காத்திருக்கின்றன. பண்டிகை நாள் வெளியீடாக நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வருவது சாதாரணமானதுதான். ஆனால், அதிக படங்கள் வெளியாகும்போது ... மேலும் பார்க்க

டியூட் புதிய போஸ்டர்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்... மேலும் பார்க்க

ஹெச். வினோத் இயக்கத்தில் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் தன் அடுத்தப் படத்திற்கான கதையைக் கேட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். இதில், கூலி ஆகஸ்ட்... மேலும் பார்க்க

தாமஸ் முல்லரின் கடைசி போட்டி: பீர், கோப்பையுடன் கொண்டாடிய பெயர்ன் மியூனிக்!

ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக 25 ஆண்டுகளாக விளையாடிவரும் தாமஸ் முல்லர் இந்த சீசனோடு அணியை விட்டு பிரிகிறார்.35 வயதாகும் தாமஸ் முல்லர் பெயர்ன் மியூனிக் அணிக்காக 750 போட்டிகளில் ... மேலும் பார்க்க

விஜய் சேதுபதியின் ஏஸ் டிரைலர்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப... மேலும் பார்க்க